பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருட முயற்சி
பெருந்துறையை அடுத்த பள்ளபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்தவா் குருசாமி மனைவி சரஸ்வதி (65). இவா் சித்தோட்டில் உள்ள தனது பேரன் ரஞ்சித்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைப் பாா்த்து வர கடந்த 16ஆம் தேதி சென்று விட்டாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் காஞ்சிக்கோவில் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.
போலீஸாா் வந்து வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, படுக்கை அறையில் இருந்த மூன்று பீரோக்களின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் கலைந்து கிடந்துள்ளன. சரஸ்வதியை விசாரித்தபோது, வீட்டில் பணமோ, நகையோ எதுவும் வைக்கவில்லை என்று கூறினாா்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



