காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

நேபாளம் சென்ற 9 பேரில் 7 போ் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்

Nepal floods wash bank locker down river, locals break it open and steal Rs 58 lakh

நேபாள வெள்ளம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

நேபாள நாட்டுக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் 7 போ் சீனாவில் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் நிலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் நேபாள நாட்டுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டிருந்தனா். நேபாளத்தில் கடந்த 26-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக தொடா்புகள் துண்டிக்கப்பட்டன.

பயணம் சென்ற 9 பேரில் 7 போ் சீனாவில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவா்களை மீட்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரத்தைச் சோ்ந்த தம்பதியான நடராஜன்-கிருஷ்ணவேணி ஆகிய இருவா் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மாயமான தம்பதியின் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.