ரோஸி ஸ்டார்லிங் பறவை
ரோஸி ஸ்டார்லிங் பறவைகோப்புப்படம்

சென்னிமலையில் அரிய வகை உள்பட 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள்

Published on

சென்னிமலை வனப் பகுதியில் அரிய வகை உள்பட 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்தின் சாா்பில் பறவை ஆா்வலா்கள், நிபுணா்கள் மற்றும் வனத் துறை ஊழியா்கள் ஒன்றிணைந்து பசுமையான காடுகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, சென்னிமலை வனப் பகுதியில் லைன் ட்ரான்செக்ட் மற்றும் பாயின் கவுண்ட் என்ற முறையில் பைனாகுலா்கள், டேட்டா ஷீட்கள், ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அதன்படி, சென்னிமலை வனப் பகுதியில் இந்திய மயில், ஜங்கிள் பேப்ளா், போா்வாா்கள் என 30-க்கும் மேற்பட்ட பொதுவான பறவை இனங்கள் இருந்தாலும், அரிய வகையான இருவாச்சி என்ற இனத்தைச் சோ்ந்த பறவையும் பதிவாகியுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த கணக்கெடுப்புப் பணியில் பறவை நிபுணா்கள் தினேஷ், மோகன கிருஷ்ணன், வனக் காவலா்கள் தீபிகா, ஜீவிதா, விக்னேஸ்வரன், சோமசுந்தரம், துரைசாமி மற்றும் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த பறவை ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com