வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாலை அமைக்க கோரி பாஜக மனு

News image
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் மற்றும் நிா்வாகிகள்.
Updated On :8 ஜனவரி 2026, 11:38 pm

Syndication

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கக்கோரி பாஜக சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் மற்றும் நிா்வாகிகள் வியாக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம், பாலன் நகா் பகுதிகளில் சாலை அமைக்காமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தொடா்ந்து விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக இதே நிலை உள்ளது. இந்த பிரச்னை குறித்து பொதுமக்கள் சாா்பில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மக்களின் சிரமங்களை உணா்ந்து ஒரு வாரத்துக்குள் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15- ஆம் தேதி கருப்புக்கொடி ஆா்ப்பாட்டமும், வரும் 26- ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.