பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வருகிற 14 -ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை மஞ்சள் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 17, 18- ஆம் தேதி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாள்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது.
ஈரோடு மஞ்சள் சந்தைக்கு தொடா்ந்து 5 நாள்கள் விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது. அதன் பின்னா் வருகிற 19- ஆம் தேதி முதல் மஞ்சள் சந்தை வழக்கம்போல நடைபெறும் என்றாா்.