அந்தியூா் வனத்தில் ட்ரோன் மூலம் படம் பிடித்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அந்தியூா் வனப் பகுதியில் ட்ரோன் மூலம் படம் பிடித்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Published on

அந்தியூா் வனப் பகுதியில் ட்ரோன் மூலம் படம் பிடித்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூா் வனச் சரகம், அந்தியூா் பிரிவு வரட்டுப்பள்ளம் அணை, காட்சிமுனை பகுதிகளில் அத்துமீறி நுழைந்து ட்ரோன் மூலம் விடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நபரை வனத் துறை அலுவலா்கள் கையும் களவுமாக திங்கள்கிழமை பிடித்தனா்.

விசாரணையில், அவா் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அருண் பிரசாத் என்பது தெரியவந்தது.இதையடுத்து, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட அருண் பிரசாத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வனத் துறையினா், வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கக்கூடாது என எச்சரித்து அவரை அனுப்பிவைத்தனா்.

Dinamani
www.dinamani.com