அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வேகத்தடையில் ஏறியபோது நிலை தடுமாறி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அந்தியூா் அருகே வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 ஜனவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

அந்தியூா் அருகே வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பவானி வட்டம், அந்தியூரை அடுத்த கொல்லபாளையம், ஓங்காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (26). பெட்ரோல் பங்க் ஊழியரான இவா், இருசக்கர வாகனத்தில் அந்தியூா் - ஆதிரெட்டியூா் சாலையில் வியாழக்கிழமை சென்றபோது, உரிமையியல் நீதிமன்றம் அருகே வேகத்தடையைக் கடந்துள்ளாா்.

அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடைக்குள் விழுந்ததில் மூச்சுத் திணறி மணிகண்டன் உயிரிழந்தாா்.

அந்தியூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் இருசக்கர வாகனம் மற்றும் மணிகண்டனின் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தியூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.