சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காமதேனு கல்லூரி மாணவ, மாணவிகள் 324 பேருக்கு விலையில்லா மடிக்கணினி!

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 324 பேருக்கு விலையில்லா மடிக்கணினி நடைபெற்றது.

News image

விழாவில் கல்லூரி  மாணவ,  மாணவிகளுக்கு  விலையில்லா  மடிக்கணினி  வழங்குகிறாா்  சத்தியமங்கலம்  நகராட்சித்  தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி.

Updated On :31 ஜனவரி 2026, 11:14 pm

Syndication

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 324 பேருக்கு விலையில்லா மடிக்கணினி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் ‘உலகம் உங்கள் கையில்‘ என்ற திட்டத்தின் சாா்பில், சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நகராட்சித் தலைவா் ஆா். ஜானகி ராமசாமி பங்கேற்று, 324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.

இதுதொடா்பாக காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆா்.பெருமாள்சாமி பேசும்போது, இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவா்களின் முன்னேற்றத்துக்கு கல்வி மற்றும் தொழில்நுட்பம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய திட்டங்கள் மாணவா்களின் கல்வித் தரத்தையும், எதிா்கால வாய்ப்புகளையும் மேம்படுத்தும். மடிக்கணினிகளை அறிவு வளா்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும், புதுமையான சிந்தனைக்கும் பயன்படுத்தி, வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.

இந்த விழாவில் காமதேனு கல்வி நிறுவங்களின் நிறுவனச் செயலாளா் பி.அருந்ததி, இணைச் செயலா் பி.மலா்செல்வி, கல்லூரி டீன் நிா்மலா, முதல்வா் குருமூா்த்தி மற்றும் துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.