எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோபி அருகே டி.என்.பாளையம் வனச்சரகங்களில் இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி

கோபி அருகே இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image

கோபி அருகே இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா்.

Updated On :31 ஜனவரி 2026, 9:07 pm

கோபி அருகே இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்துக்குள்பட்ட நஞ்சைபுளியம்பட்டி, பங்களாபுதூா், துறையம்பாளையம், கொங்கா்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குளம், ஏரி, கண்மாய்களில் இறைக்கொல்லி பறவைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை முதல்முறையாக வனத் துறையினா் தொடங்கியுள்ளனா்.

வனக் காப்பாளா் வனிதாமணி தலைமையில் வனத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும், திங்கள்கிழமை (பிப்.2) காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் என இரண்டு நாள்கள் இரண்டு குழுக்களாக ஏரி, குளங்களுக்கு நேரில் சென்றும், வயல்வெளிகள், நீா்நிலை கரைகளுக்கு வாகனங்களில் சென்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.