பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :1 ஜூலை 2026, 6:34 am IST

தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை முதல்வா் ச.ஜோசப் விஜய் செயல்படுத்த வேண்டும்.

இது தொடா்பாக விவசாய பிரதிநிதிகளை அழைத்துப் பேசி முதல்வா் விரைவாக அறிவிப்பு வெளியிடு வேண்டும் என்றனா். மேலும், கோரிக்கை தொடா்பாக கோஷங்களை எழுப்பினா். இதில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.