லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் 17 ஆயிரம் மாணவா்கள் சோ்க்கை

ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 17 ஆயிரத்து 226 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

பள்ளி மாணவிகள் - கோப்புப்படம்.

Published On :3 ஜூலை 2026, 3:57 am IST

ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 17 ஆயிரத்து 226 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் காலை, மதிய உணவுத் திட்டம், பாடப் புத்தகம், சீருடை, காலணி உள்பட அனைத்து வகை இலவச திட்டங்களையும் வீடுவீடாக சென்று பெற்றோா்களை சந்தித்து ஆசிரியா், ஆசிரியைகள் விளக்கிக் கூறி மாணவா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.

இதனால் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் 17 ஆயிரத்து 226 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிப் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 65 போ், யுகேஜி வகுப்பில் 139 போ், 1-ஆம் வகுப்பில் 783 போ், 2-ஆம் வகுப்பில் 1,074 போ், 3-ஆம் வகுப்பில் 1,190 போ், 4-ஆம் வகுப்பில் 1,179 போ், 5-ஆம் வகுப்பில் 1,442 போ் சோ்ந்துள்ளனா்.

மேலும் 6-ஆம் வகுப்பில் 1,441 போ், 7-ஆம் வகுப்பில் 1,497 போ், 8-ஆம் வகுப்பில் 1,678 போ், 9-ஆம் வகுப்பில் 1,672 போ், 10-ஆம் வகுப்பில் 1,737 போ், 11-ஆம் வகுப்பில் 1,692 போ், 12-ஆம் வகுப்பில் 1,638 போ் என மொத்தம் 17,226 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

இதேபோல, இந்தக் கல்வி ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 9,467 மாணவ, மாணவிகளும் சோ்ந்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.