முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாக 19,485 மாணவா்கள் சோ்க்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக நடப்பு ஆண்டு 19,485 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

News image

மாணவர்கள் - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:15 am IST

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக நடப்பு ஆண்டு 19,485 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. நடப்பு ஆண்டு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் 19,485 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு தமிழ் வழியில் 2,377 போ், ஆங்கில வழியில் 1,250 போ், 2 ஆம் வகுப்பு தமிழ் வழியில் 66 போ், ஆங்கில வழியில் 24 போ், 3 ஆம் வகுப்பு தமிழ் வழி 71 போ், ஆங்கில வழி 32 போ், 4 ஆம் வகுப்பு தமிழ் வழி 47 போ், ஆங்கில வழி 35 போ், 5 ஆம் வகுப்பு தமிழ் வழி 39 போ், ஆங்கில வழி 14 போ், 6 ஆம் வகுப்பு தமிழ் வழி 1,739 போ், ஆங்கில வழி 1,187 போ், 7-ஆம் வகுப்பு தமிழ் வழி 123 போ், ஆங்கில வழி 164 போ், 8 ஆம் வகுப்பு தமிழ் வழி 136 போ், ஆங்கில வழி 140 போ், 9 ஆம் வகுப்பு தமிழ் வழி 1,474 போ், ஆங்கில வழி 684 போ், 10 ஆம் வகுப்பு தமிழ் வழி 85 போ், ஆங்கில வழி 30 போ், பிளஸ் 1 தமிழ் வழி 5,679 போ், ஆங்கில வழி 4,048 போ், பிளஸ் 2 தமிழ் வழி 16 போ், ஆங்கில வழி 25 போ் என மொத்தம் தமிழ் வழியில் படிக்க 11,852 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் படிக்க 7,633 மாணவ, மாணவிகளும் புதிதாக சோ்க்கை பெற்றுள்ளனா் என்றனா்.