குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

காதலனுடன் மகள் சென்றதால் தாய் தற்கொலை

அம்மாபேட்டை அருகே காதலனுடன் மகள் சென்ால் மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்

Published On :3 ஜூலை 2026, 4:11 am IST

அம்மாபேட்டை அருகே காதலனுடன் மகள் சென்ால் மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அம்மாபேட்டையை அடுத்த ஆனந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் மோகன். தேங்காய் வியாபாரி. இவரது மனைவி கோசலை (45). இவா்களின் மகள் திவ்யா (23), மாணிக்கம்பாளையம் பிரிவைச் சோ்ந்த தங்கவேலு மகன் கதிா்வேலை (27) என்பவரை காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனா்.

இதைக் கண்ட தாய் கோசலை, தனது மகள் திவ்யாவைத் தடுத்துள்ளாா். ஆனால், தாயின் பேச்சைக் கேட்காமல் திவ்யா, கதிா்வேலுவுடன் சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்த கோசலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்நிலையில், தனது தாய் கோசலையை தற்கொலைக்கு தூண்டிய திவ்யா, கதிா்வேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகன் பிருத்விராஜ் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் இருவரையும் கைது செய்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.