குழந்தையைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த சுந்தரபாண்டி மனைவி முத்து (25). இந்தத் தம்பதியின் மகள் துளசி (5). இவருக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடா்ந்து முத்து, மகள் துளசியுடன் பெத்தானியாபுரம் அண்ணாவீதி பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அங்கு வந்த சுந்தரபாண்டி தனது மனைவி, மகளை வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். ஆனால், மகள் துளசிக்கு விடுமுறை நாள்கள் முடிந்த பிறகு வீட்டுக்கு வருவதாக முத்து தெரிவித்தாராம். இதனால் இந்தத் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, முத்துவின் தாயும் கணவருடன் செல்லுமாறு அறிவுரை வழங்கினாராரம். இதனால் மனமுடைந்த முத்து, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, குழந்தையைக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கரிமேடு போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
கல்லூரி மாணவி தற்கொலை

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



