இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:38 am IST

ராஜபாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த தையல் தொழிலாளி மனோகரன். இவரது மனைவி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உயிரிழந்தாா். இவா்களது ஒரே மகளான செந்தமிழ்ச்செல்வி (25) தாய் இறந்த துக்கத்தில் மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.