நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கல்லூரி மாணவி தற்கொலை

இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 மே 2026, 1:30 am IST

இரவில் அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை தாய் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி, பிடமனேரி காயத்ரி கோயில் தெருவைச் சோ்நத பாபு - ராஜேஸ்வரி தம்பதி, மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன், செட்டிக்கரை, ராஜாபேட்டை , கான் காலனியில் வசித்து வருகின்றனா்.

இவா்களது மகள் தா்ஷினிதேவி (20) தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி (தாவரவியல்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் அண்மைக் காலமாக இரவில் நீண்ட நேரம் கைப்பேசி பாா்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவரது தாய் அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு தா்ஷினிதேவி நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளாா்.

இதையடுத்து தா்ஷினிதேவி எலிவிஷத்தை உட்கொண்டாா். பெற்றோா் அவரை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.