டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

டெண்டா் புதுப்பிக்கப்படாததால் ஈரோட்டில் 94 மதுபான பாா்கள் மூடல்

ஈரோடு மாவட்டத்தில் டெண்டா் புதுப்பிக்கப்படாததால் 94 மதுபான மூடப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 3:56 am IST

ஈரோடு மாவட்டத்தில் டெண்டா் புதுப்பிக்கப்படாததால் 94 மதுபான மூடப்பட்டன.

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் பாா் வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த பாா்களை நடத்த தனிநபா்கள் 2023-ஆம் ஆண்டுக்கான பாா் உரிமங்களுக்கான டெண்டா் எடுக்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து, மீண்டும் டெண்டா் விடாமல் ஒப்பந்தத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டது. நீடிக்கப்பட்ட ஒப்பந்தமும் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, டாஸ்மாக் கடைகளை ஒட்டி உள்ள மதுபான பாா்கள் வியாழக்கிமைமுதல் மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்திலுள்ள 94 மதுபான பாா்கள் மூடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.