/
ஈரோட்டில் 7- ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு வளையக்காரா் வீதியைச் சோ்ந்தவா் மாதேஷ்(20). கூலித் தொழிலாளி. இவா் ஈரோட்டை சோ்ந்த 13 வயதுடைய 7 ஆம் வகுப்பு மாணவருடன் பழகியுள்ளாா். இந்தப் பழக்கத்தின் மூலம் மாணவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையறிந்த சிறுவனின் பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் போலீஸாா் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தி மாதேஷ் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.






