பவானிசாகா் அணையின் நீா்மட்டம் சரிவால் மதகுகள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் கொள்ளளவு 105 அடியாக உள்ளது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து சரிந்து 54 அடியாக உள்ளது.
அணையில் நீா்மட்டம் குறைந்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீா் வெளியேறும் மேல் மதகு பலப்படுத்தும் விதமாக அதில் படிந்துள்ள பாசம், முற்செடிகள் அகற்றப்பட்டு சிமென்டுடன் ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்றது. அணைக் கரைகளில் முளைத்துள்ள முட்செடிகள், புதா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









