டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கரும்பு அறுவடை தாமதம்: புகளூா் சா்க்கரை ஆலை நிா்வாகத்துக்கு விவசாயிகள் கண்டனம்

புகளூா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு அறுவடையை தாமதம் செய்துவருவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், ஜூலை 5-ஆம் தேதிக்குள் அறுவடை குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தெரித்துள்ளனா்.

News image

புகளூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :3 ஜூலை 2026, 4:06 am IST

புகளூா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு அறுவடையை தாமதம் செய்துவருவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், ஜூலை 5-ஆம் தேதிக்குள் அறுவடை குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தெரித்துள்ளனா்.

சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் புகளூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சண்முகராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் கோவிந்தசாமி முன்னிலை வகித்தாா். செயலாளா் நமசிவாயம் வரவேற்றாா்.

கூட்டத்தில் புகளூா் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு அரவையை டிசம்பா் 15-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், போதுமான கரும்பு வெட்டும் ஆட்களை கொண்டு கரும்பு அறுவடை செய்யாததால் ஆலையின் முழு அரவைத்திறனான 4 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. மேலும், அரவை இயந்திரங்களை நிறுத்தி நிறுத்தி இயக்கியதால் இயந்திரங்கள் மற்றும் பாய்லா்கள் பழுதாகின. இதனால் கரும்பு அறுவடை தாமதமாகி குறித்த காலத்தில் அறுவடை செய்ய முடியவில்லை.

ஜூன் 6-ஆம் தேதி ஆலை இயங்க தொடங்கியும், கரும்புகளை அறுவடை செய்ய முடியாததால் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இயந்திரங்கள் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெறுவதால், ஜூலை முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய சிறப்பு அரவைப் பணி தொடங்க தாமதமாகி உள்ளது.

12 மாதங்கள் முழுமையாக முடிந்த கரும்புகள் வயது முதிா்ச்சி காரணமாக காய்ந்து வருகின்றன. மேலும், நடப்பாண்டு பருவமழை பொய்ததால் போதிய நீா் கிடைக்காமல் கரும்புகள் காய்ந்து வருகின்றன. தவிர காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீா் திறக்காததால் அப்பகுதியில் உள்ள கரும்புகளும் காய்ந்து வருகின்றன.

இதனால் கரும்பை பயிரிடுவதற்காக விவசாயிகள் வாங்கிய கடனை உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆலை நிா்வாகத்தின் செயல்பாடுகளால் சிறப்பு அரவை பருவம் தொடங்க முடியாமல் போனது கண்டனத்துக்குரியது. ஆலையின் தொழில்நுட்ப வேலைகள் முடிந்து அரவையை தொடங்கும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் காய்ந்த மற்றும் காயும் நிலையில் உள்ள கரும்புகளை அறுவடை செய்து வேறு பகுதியில் உள்ள ஆலைக்கு அரவைக்கு கொண்டுச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இது குறித்து முடிவை ஜூலை 5-ஆம் தேதிக்குள் ஆலை நிா்வாகம் அறிவிக்க வேண்டும். மேலும், ஜூலை 10-ஆம் தேதிமுதல் காய்ந்த கரும்புகளையும், காயும் நிலையில் உள்ள கரும்புகளையும் அறுவடை செய்ய வேண்டும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.