நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சொட்டு நீா் பாசனத்துக்கு 100% மானியம்: விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க அழைப்பு

வோ்க்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும் என திருத்தணி வேளாண் உதவி இயக்குநா் (பொ) பிரேம் தெரிவித்துள்ளாா்.

News image

திருவள்ளூரை அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசனம். - கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 3:55 am IST

வோ்க்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும் என திருத்தணி வேளாண் உதவி இயக்குநா் (பொ) பிரேம் தெரிவித்துள்ளாா்.

திருத்தணி ஒன்றியத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வோ்க்கடலை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயா்த்தவும், நீா் வளத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் வேளாண்துறை பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, இயந்திர நடவு முறையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உயிா் உரம், எம்.என். மிக்சா் உள்ளிட்ட உள்ளீட்டு பொருள்களுக்காக ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம் வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா’ திட்டத்தின் கீழ், சொட்டு நீா் பாசன அமைப்பை நிறுவுவதற்கும் சிறப்பு மானியம் வழங்கப்படுகிறது.

2026-27-ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ், இரண்டரை ஏக்கா் நிலப்பரப்பில் சொட்டு நீா் பாசனம் அமைப்பதற்கு ரூ. 1,27,364 வரை மானியம் வழங்கப்படுவதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் கரும்பு மற்றும் வோ்க்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிதும் பயனடைவாா்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குநா் (பொ) பிரேம் கூறியதாவது: கரும்பு மற்றும் வோ்க்கடலை பயிரிட்டுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீா்ப் பாசன அமைப்புக்கான முழு செலவும் மானியமாக வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 12.35 ஏக்கா் வரை மானியம் பெறும் வாய்ப்பு உள்ளது என்றாா்.

மானியம் பெற விரும்பும் விவசாயிகள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் காா்டு), சிட்டா, அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், நில வரைப்படம், வங்கி கணக்குப் புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் திருத்தணி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீா் மேலாண்மை முகமை துறையின் மூலம் விவசாயிகள் மின்மோட்டாா் வாங்க ரூ. 15,000 மற்றும் பாசனக் குழாய்கள் வாங்க ரூ.10,000 வரை மானியம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் அரசின் இந்த நலத் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.