மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ஈரோட்டில் புதைவட மின் கேபிளில் பழுது: இருளில் தவித்த பொதுமக்கள்

ஈரோடு- மேட்டூா் சாலையில் புதைவட மின் கேபிளில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியா்கள்.

Published On :6 ஜூலை 2026, 12:22 am IST

ஈரோடு- மேட்டூா் சாலையில் புதைவட மின் கேபிளில் பழுது ஏற்பட்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை இரவு இருளில் தவித்தனா்.

ஈரோடு ஈவிஎன் சாலையில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து புதை வடமாக அமைக்கப்பட்ட மின் கேபிள் மூலம் இடையன்காட்டுவலசு, வீரப்பன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் விசைத்தறி தொழிற்சாலைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில் 33 கே.வி. திறன்கொண்ட அந்த புதைவட மின் கேபிளில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இடையன்காட்டு வலசு, நசியனூா் சாலை, அகில்மேடு வீதி, மேட்டூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப உபகரணம் வாயிலாக பழுது ஏற்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்து மேட்டூா் சாலையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் குழி தோண்டி பழுது ஏற்பட்ட மின் கேபிளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் இடையன்காட்டுவலசு, நசியனூா் சாலை, அகில்மேடு வீதி, மேட்டூா் சாலை உள்ளிட்ட பகுதி மக்கள் இருளில் தவித்தனா். மேலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மின்சாரம் இல்லாமல் குடியிருப்புவாசிகள் கடுமையாக அவதியுற்றனா். பின்னா் மாலை 4 மணிக்கே மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே மேட்டூா் சாலையில் புதைவட மின் கேபிள் சீரமைக்கும் பணியால் அகில்மேடு வீதி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.