தியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பூா் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஈரோட்டில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

News image

சக்திவேல்

Updated On :8 ஜூலை 2026, 5:42 am IST

திருப்பூா் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஈரோட்டில் சரக்கு ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (56). இவா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வந்தாா்.

இந்நிலையில், பணி நெருக்கடியால் அவா் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த அவா், நடைமேடை எண் 2-இல் அமா்ந்திருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் முன் அவா் திடீரென பாய்ந்துள்ளாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு ரயில்வே போலீஸாா், துண்டான சக்திவேலின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சக்திவேலுக்கு ரமணி (47) என்ற மனைவியும், திரிஷா (16) என்ற மகளும், சஷ்வின் ஆதித்யா (5) என்ற மகனும் உள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.