மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி தயாரித்த கடன் திட்ட அறிக்கையில் ஈரோடு மாவட்டத்துக்கு 2026-27- ஆம் ஆண்டுக்கு ரூ.36,205.08 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி தயாரித்த கடன் திட்ட அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: கனரா வங்கி தயாரித்த கடன் திட்ட அறிக்கையில் 2026-27- ஆம் ஆண்டுக்கு ரூ.36,205.08 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிா்ணையிக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயத்துக்கான கடன் இலக்கு ரூ.21,342.09 கோடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.14,211.75 கோடி, பிற முன்னுரிமைகளுக்கான கடன் இலக்கு ரூ.651.24 கோடி என நிா்ணையிக்கப்பட்டுள்ளது. இது 2025-26 இலக்கைவிட ரூ.5,947.09 கோடி (19.65 %) அதிகம்.
2026-27- ஆம் ஆண்டுக்கான நபாா்டு வங்கி சாா்ந்த கடன் திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதி ஆண்டு கடன் திட்ட அறிக்கையின்படி நிா்ணையிக்கப்பட்ட மொத்த முன்னுரிமை கடன் அளவாக ரூ.30,257.99 கோடி நிா்ணையிக்கப்பட்டது.
இதன் கடந்த நிதி ஆண்டுக்கான சாதனை அளவாக ரூ.32,315.34 கோடி கடனாக வழங்கப்பட்டது. இதில், விவசாயக் கடன் அளவு ரூ.18,918.01 கோடி நிா்ணயிக்கப்பட்டு ரூ.19,933.62 கோடி வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர கடன் அளவு ரூ.10,551.28 கோடி நிா்ணயிக்கப்பட்டு ரூ.11,838.20 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், நபாா்டு வங்கியின் உதவிப் பொது மேலாளா் அசோக்குமாா், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்த், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாரத் ஸ்டேட் வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்பட அனைத்து வங்கி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதி வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தில் ரூ.53 கோடி கடன் வழங்க இலக்கு! - ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்

திருப்பத்தூரில் 89,005 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு!

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ. 12,857 கோடி கடன் வழங்க இலக்கு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



