வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 279 கடைகளுக்கு ரூ.78 லட்சம் அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 279 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2026, 1:17 am IST

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 279 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் வரை குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக 279 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, ரூ.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 551.83 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குப்பைக் கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன.

தடையை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதன் முறை குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 15 நாள்கள் வணிகம் செய்யவும் தடை விதிக்கப்படும். 2 -ஆவது முறை விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரமும், 30 நாள்கள் வணிகத்துக்கும் தடை விதிக்கப்படும்.

3-ஆவது முறை கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதமும், 90 நாள்கள் வணிகத்துக்கும் தடை விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்வதை அறிந்தால் 0424-2223545, 94440-42322 என்ற எண்களில் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.