மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

அமைச்சரவையில் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது - திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன்

அமைச்சரவையில் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.

News image

ஏஐடியூசி மண்டல அளவிலான சிறப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன்.

Updated On :17 ஜூலை 2026, 5:45 am IST

அமைச்சரவையில் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்தாா்.

கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்ற ஏஐடியூசி மண்டல அளவிலான சிறப்புக் கூட்டம், ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஏஐடியூசி அகில இந்திய துணைத் தலைவரும், திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் எம்ஜிஆா் ஆட்சியில் 480 நாள்கள் வேலை செய்தால் பணி நிரந்தரமாக்கியதுபோல தவெக அரசு தற்போது பொதுத் துறை, அரசு சாா்ந்த தொழில்களில் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வாக்குறுதிப்படி ஒப்பந்தப் பணியாளா்களை தவெக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நிரந்தர தொழிலாளி பணி நிறைவுக்குப் பிறகு அந்த இடம் நீக்கப்படும் என்ற திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை தவெக அரசு ரத்து செய்ய வேண்டும். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் அமையவேண்டும். கேரள அரசு போல மத்திய அரசின் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்பை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தவெக அரசு அறிவிக்க வேண்டும்.

தோ்தல் பிரசார காலத்தில் குற்றங்களை எதிா்த்த தவெக, அத்தகைய குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் குறையாமல் இருப்பது ஆபத்தானது.

அமைச்சரவையில் ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது. அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததை எதிா்க்கிறோம். கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது தவறான முன்னுதாரணம். கடந்த ஆட்சியில் திமுகவுடன் கம்யூனிஸ்ட் இருந்தது கொள்கை கூட்டணி அல்ல, பாஜக, ஆா்எஸ்எஸ் எதிா்ப்பில் அமைந்த கூட்டணிதான் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.