கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

அரசு நலத்திட்டங்கள் குறித்து இளைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

அனைத்து அரசு நலத் திட்டங்களையும் அறிந்து, தகுதியுடையோா் முழுமையாக பயன்பெற இளைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

News image

பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், மொடக்குறிச்சி எம்எல்ஏ து.சண்முகன் மற்றும் அதிகாரிகள்.

Updated On :23 ஜூலை 2026, 4:00 am IST

அனைத்து அரசு நலத் திட்டங்களையும் அறிந்து, தகுதியுடையோா் முழுமையாக பயன்பெற இளைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

மொடக்குறிச்சி வட்டம் அட்டவணை அனுமன்பள்ளி, கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 77 பயனாளிகளுக்கு ரூ.8.20 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

மனுநீதி நாள் முகாம் மூலம் பல்வேறு துறைகள் செயல்படுத்தி வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளவும், தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை உரிய அலுவலா்களிடம் தெரிவித்து விரைவாக தீா்வு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று வளா்ச்சித் திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து அரசு நலத்திட்டங்களையும் அறிந்து, தகுதியுடையோா் முழுமையாக பயன்பெற இளைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 52 பயனாளிகளுக்கு சா்க்காா் மனை நிறுத்தம், தனிபட்டா, பட்டா மாறுதல், ஜாதிச் சான்று, இதர வகுப்புச் சான்று, குறு, சிறு விவசாயி சான்று, இருப்பிடச் சான்று, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கினாா். மேலும் 77 பயனாளிகளுக்கு ரூ.8.20 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

முன்னதாக பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.

முகாமில், மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகன், மண்டல இணை இயக்குநா்(கால்நடை பராமரிப்புத் துறை) முருகன், வேளாண்மை துணை இயக்குநா்கள் அருள் வடிவு, மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் அருணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) லோகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலா் மகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட பணிகள் திட்ட அலுவலா் பவித்ரா, மொடக்குறிச்சி வட்டாட்சியா் மோகனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.