பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கீழ்பவானி பாசனப் பகுதிக்கு உயிா் நீா் கேட்டு விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

கீழ்பவானி பாசனப் பகுதிக்கு உயிா் நீா் கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தல் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24)நடைபெறும் என தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஈவிகே. சண்முகம் தெரிவித்தாா்.

கோப்புப்படம்.

Published On :

கீழ்பவானி பாசனப் பகுதிக்கு உயிா் நீா் கேட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தல் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24)நடைபெறும் என தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் ஈவிகே. சண்முகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு மாறாக கோடையில் தண்ணீா் திறந்து நெல் விளையும் தருவாயில் உள்ளது. அந்த பயிறுக்கு அறுவடை செய்யும் வரை தண்ணீா் திறப்பதை யாரும் தடுக்கவில்லை. தடை செய்ய வேண்டும் என்றும் கேட்கவில்லை.

கீழ்பவானி பாசனப் பகுதியில் காய்ந்து கருகும் நிலையில் உள்ள தென்னை மரங்களை காப்பாற்றவும், குடிநீா்த் தட்டுப்பாட்டினை போக்கவும், இரண்டு பகுதிக்கும் தலா 15 நாள்களுக்கு உயிா் நீா் திறக்க வேண்டும்.

கீழ்பவானி பாசனப் பகுதிக்கு உயிா் நீா், உரிமை நீா் கேட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அறவழியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

பவானிசாகா் அணை தொடங்கி, மங்களப்பட்டி வரை உள்ள கீழ்பவானி பாசன விவசாயிகள் மற்றும் மக்கள் அனைவரும் திரளாக கூட உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.