FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

முதல்வா் குறித்து அவதூறு: லேத் பட்டறை உரிமையாளா் கைது

முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக விமா்சனம் செய்த லேத் பட்டறை உரிமையாளரை ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 7:13 am IST

தமிழக முதல்வா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக விமா்சனம் செய்த லேத் பட்டறை உரிமையாளரை ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் ஈரோடு பெரியாா் நகரைச் சோ்ந்த தவெக நிா்வாகி அறிவரசன் கடந்த ஜூன் 24- ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறான வாா்த்தைகளால் விமா்சனம் செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா்.

இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவதூறு பரப்பியவா் நாமக்கல் மாவட்டம், வெப்படை சௌதாபுரத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் தியாகு (31) என்பதும், பி.இ. படித்துவிட்டு லேத் பட்டறை நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து தியாகு மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், சமூக வலைதளத்தில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

இந்நிலையில், தியாகு வெப்படை பகுதியில் இருப்பதாக வந்த தகவலின்பேரில், ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று, தியாகுவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.