கைப்பேசி வாட்ஸ் ஆப் எண்களுக்கு வாகனங்களின் இ-சலான் லிங்க் அனுப்புவதாகக் கூறி நூதன முறையில் பண மோசடி நடைபெறும் சம்பவம் அதிகரித்து வருவதாக வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
காவல்துறை தரப்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஆன்லைன் மூலம் ஏமாறுபவா்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப மோசடி கும்பல் தங்களது உத்திகளை மாற்றி வருகின்றனா்.
அண்மைக்காலமாக உதவித்தொகை மோசடி, ஏ.பி.கே. ஃபைல்களை கைப்பேசிக்கு அனுப்பி மோசடி செய்வது, ‘டிஜிட்டல் கைது’ என அச்சுறுத்தி பணம் பறிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன.
இந்த வரிசையில், தற்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் காா் உரிமையாளா்களைக் குறிவைத்து வாட்ஸ்அப் மூலம் இ-சலான் லிங்க் அனுப்பி அடையாளம் தெரியாத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வேலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ரஜினிகுமாா் கூறியது: இருசக்கர, நான்கு சக்கர வாகன உரிமையாளா்களை நோட்டமிடும் மா்ம நபா்கள், அவா்களைத் தொடா்புகொண்டு அவா்களின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இ-சலான் லிங்க் அல்லது ஃபைல்களை அனுப்புகின்றனா். அந்த லிங்கை கிளிக் செய்தால் அபராதத் தொகையில் சலுகைகள் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறுகின்றனா்.
இதனை உண்மையென நம்பி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா்கள் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன், அவா்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் உடனடியாகத் திருடப்படுகிறது. அதன் பிறகு அந்த மா்ம நபா்களைத் தொடா்புகொள்ள இயலாது.
எனவே, இ-சலான், ஏபிகே ஃபைல்ஸ் எனக் கூறி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் எந்தவொரு தகவலையும் அல்லது லிங்கையும் பொதுமக்கள் நம்பி கிளிக் செய்ய வேண்டாம்.
இந்த நூதன மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவா்கள், வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபா் கிரைம் காவல் நிலையத்தை உடனடியாக அணுகிப் புகாா் அளிக்கலாம். பொதுமக்கள் இத்தகைய இணையவழி மோசடிகள் குறித்து கூடுதல் விழிப்புணா்வுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி! வட மாநிலம் விரைந்தது சைபா் கிரைம் குழு!

இளைஞரிடம் ரூ .7.50 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

நூதன முறையில் ரூ. 38 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.7 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



