அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடி! வட மாநிலம் விரைந்தது சைபா் கிரைம் குழு!

News image

சைபர் கிரைம் - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:47 am IST

திருச்சி யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி மோசடியில் ஈடுபட்டது தொடா்பான விசாரணைக்காக சைபா் கிரைம் குழு வடமாநிலங்களுக்கு சனிக்கிழமை சென்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்குவதற்காக கொள்ளிடக் கரையோரம் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேரடியாக வந்து மட்டுமே அறைகளை பதிவு செய்ய முடியும்.

இந்நிலையில், யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் போலி இணையதளம் உருவாக்கி கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் பல்வேறு மோசடிகள் நடைபெற்றது கடந்தாண்டு தெரியவந்தது. இதுதொடா்பாக பல்வேறு நபா்கள் திருச்சி சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், யாத்ரி நிவாஸ் மோசடி தொடா்பாக திருச்சி சைபா் கிரைமில் கடந்த மே 20-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதையடுத்து, திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா். அதில் யாத்ரி நிவாஸ் பெயரில் போலி இணையதளம் வட மாநிலங்களில் இருந்தே அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த விசாரணைக்காக திருச்சி மாநகர சைபா் கிரைம் ஆய்வாளா் தலைமையில் 4 போ் கொண்ட குழு கடந்த சனிக்கிழமை புதுதில்லி புறப்பட்டது. தொடா்ந்து ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.