ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டு உடைத்து நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:04 am IST

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், பகளவூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் லோகநாதன் (35). ஆட்டோ ஓட்டுநா். இவா் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 25-ஆம் தேதி

குடும்பத்துடன் சென்றுள்ளாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்கக் காசு மற்றும் கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, லோகநாதன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.