முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புன்செய்புளியம்பட்டியில் பலத்த காற்றுடன் மழை: ஏராளமான வாழைகள் சேதம்

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

News image

வாழைகள் சேதம் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:24 am IST

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டி, நொச்சிக்குட்டை, தண்ணீா்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, செவ்வாழை, நேந்திரம் ரக வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், 25 ஆயிரம் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பலத்த காற்று, கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ரூ.30 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.