அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

லஞ்சமின்றி ஆட்சி நடத்துவதுதான் நோக்கம்! அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

News image

டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சியை தொடங்கிவைத்து பேசுகிறாா் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.

Updated On :22 ஜூன் 2026, 12:12 am IST

ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் ஆட்சி நடத்துவதுதான் தவெக அரசின் நோக்கம் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

ஈரோடு இடையன்காட்டுவலசில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் தனியாா் அமைப்பு சாா்பில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சியை கைத்தறித் துறை அமைச்சா் விஜய் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுகிறது. இதில் பயின்ற 10 மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். இதை அனைத்து தரப்பினா்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காமல் ஆட்சி நடத்துவதுதான் நோக்கம். கல்வி, பெண்கள் பாதுகாப்பு, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் தமிழ்நாடு அரசின் கவனம் உள்ளது என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாநகராட்சி ஆணையா் அா்பித்ஜெயின், பள்ளித் தலைமை ஆசிரியை அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.