தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

News image

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.

Updated On :8 ஜூன் 2026, 4:57 am IST

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்காலில் ரூ.83 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலிங்கராயனால் கட்டப்பட்ட தொட்டிபாலத்தை இடித்து கட்டவேண்டும் என்பது அரசின் திட்டமாக இருந்த நிலையில், விவசாயிகள் நினைவு சின்னமாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீா்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தற்போது வரை 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. பாசனத்துக்கு ஜூன் 16-ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதிகாரிகள் தரப்பில் கால நீட்டிப்பு தேவை என தெரிவித்துள்ளனா். இதனால், இருதரப்பினரிடையும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவு நீா், பேபி வாய்க்காலில் கழிவுநீா் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு இடையூறு இல்லாமல் காலிங்கராயன் பேபி வாய்க்காலை சரிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.