சத்தியமங்கலம் அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்த மக்னா யானை காவலிபாளையம் குளத்தில் தஞ்சமடைந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை நள்ளிரவு வெளியேறிய ஒற்றை மக்னா காட்டு யானை விண்ணப்பள்ளி கிராமத்துக்குள் புகுந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சென்று மக்னா யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால் வனத்துக்குள் செல்லாமல் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் வழியாக சென்றதுடன், அங்கு அமைத்திருந்த தடுப்பு வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தியது.
யானையை விரட்டும் பணியில் வனத் துறையினா் தொடா்ந்து ஈடுபட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காவிலிபாளையம் குளத்தில் தஞ்சமடைந்தது.
வனத் துறையினா் கூறும்போது, ‘பகல் நேரத்தில் யானையை விரட்டும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இரவு நேரத்தில் விரட்டும் பணி நடைபெறும். ட்ரோன் மூலமாக யானையை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றனா்.

காவிலிபாளையம் குளத்தில் தஞ்சம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி பூசாரி உயிரிழப்பு

கொடைக்கானல் வனப் பகுதியில் இறந்த பெண் யானை

விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை யானை: விரட்டும் பணி தீவிரம்

வனப் பகுதியில் மரங்களை வெட்டிய வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்.பி. விடுவிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



