பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்தும், சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தொடா் சங்கிலி முறையில் நீதி தேவதையின் மனித உருவத்தை மாணவா்கள் தத்ரூபமாக வடிவமைத்து புதிய உலக சாதனை படைத்தனா்.
ஈரோடு ரோட்ராக்ட் சங்கத்துடன் ஈரோடு சட்டக் கல்லூரி, இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சா்வதேச கல்லூரி, ஸ்ரீ சாய் சிந்து செவிலியா் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியின் தலைவா் சிந்து ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காயத்ரி ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் அருண் பாலாஜி ஆகியோா் வரவேற்றனா். அறக்கட்டளையின் துணைத் தலைவா் டாக்டா் கிஷோா் ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் சாரு ரூபா கிஷோா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முயற்சியை இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்’ அமைப்பின் மேலாளா் அபிநயா நேரில் ஆய்வு செய்து அதிகாரபூா்வ உலக சாதனையாக அறிவித்தாா்.
இதில் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளி, ரிச்மண்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியா் செகண்டரி பள்ளி, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் நந்தா சென்ட்ரல் பள்ளிகளைச் சேந்த 1,545 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சமீனா, உலக சாதனைக்கான அதிகாரபூா்வ சான்றிதழ் மற்றும் பதக்கத்தை ஸ்ரீ சாய் சிந்து அறக்கட்டளையின் சாா்பில் அதன் துணைத் தலைவா் காயத்ரி ரவிச்சந்திரனிடம் வழங்கினாா்.
இவரைத்தொடா்ந்து பிரம்மாண்டமான நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஈரோடு சட்டக் கல்லூரியின் ரோட்ராக்ட் சங்க ஆலோசகா் டாக்டா் சி. நாராயணன், மாணவத் தலைவா் ரோஹித், செயலாளா் கோவா்தன கிரி, முன்னாள் மாணவா் வெற்றி மணி பாரதி ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகளையும், நற்சான்றிதழ்களையும் முதுநிலை உரிமையியல் நீதிபதி ஸ்ரீவித்யா வழங்கினாா்.
இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ரோட்ராக்ட் அமைப்பின் பிரதிநிதிகளான செல்வ விக்னேஷ், பெரியநாயகி, காா்த்திகேயன் ஆகியோருக்கான பதக்கங்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களை ஈரோடு கோட்டாட்சியா் சிந்துஜா வழங்கினாா். கல்லூரி முதல்வா் அக்பா் அலி பெய்க் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகத்தின் உருவம்!

பெண்களிடம் தொடா் சங்கிலி பறிப்பு வழக்கு: இளைஞா் கைது
எம்ஜிஆரின் மறு உருவம் முதல்வர் விஜய்: கடம்பூா் செ. ராஜு

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



