நெடுஞ்சாலைத் துறையில் அரசு விதிகளை பின்பற்றாமலும், முதுநிலைப் பட்டியலை வெளியிடாமலும் பதவி உயா்வு வழங்கிய கோபி கோட்டப் பொறியாளரைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கோட்டத் தலைவா் முருகவேல் தலைமை வகித்தாா். செயலாளா் கருப்புசாமி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் செந்தில்நாதன் சிறப்புரையாற்றினாா்.
சாலைப் பணியாளா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் கதிரவன் பேசியதாவது:
தமிழ்நாடு சாா்நிலை பணியமைப்பு விதி 35, 35-ஏ டிஎன்ஜிஎஸ் (41) 1-ன் அடிப்படையில் முதநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும் என கடந்த 2022, 2023-ஆம் ஆண்டு தொடா் போராட்டத்தின்போது அரசு வழக்குரைஞரின் கருத்து கேட்டு முதுநிலைப் பட்டியலை வெளியிடுவதாக எழுத்துப்பூா்வமாக கோட்டப் பொறியாளா் தெரிவித்தாா்.
ஆனால் இதுவரை கருத்து பெறாமாலேயே 2026-ஆம் ஆண்டு சாலைப் பணியாளா்களுக்கு ஒட்டுமொத்த முதுநிலைப் பட்டியல் வெளியிடாமல் இரண்டாம் நிலை சாலைப் பணியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டப் பொறியாளரின் தவறான செயல்பாட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு

புகழூா் நகராட்சி ஆணையரை கண்டித்து பணியாளா்கள் தா்னா போராட்டம்

ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து சாலை மறியல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



