முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து சாலை மறியல்

சாலை  மறியலில்  ஈடுபட்ட  கன்னிகாபுரம்  பொதுமக்கள். 

News image

சாலை  மறியலில்  ஈடுபட்ட  கன்னிகாபுரம்  பொதுமக்கள். 

Updated On :9 ஜூலை 2026, 10:28 pm IST

ஆற்காடு அடுத்த கலவை அருகே நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கலவை வட்டம், ஆரூா் ஊராட்சி, கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பலஆண்டுகளுக்கு மேலாக சாலைப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஆரணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அந்தப் பகுதியில் இருந்து 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 7 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஆரணி நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து 60 குடும்பங்களைச் சோ்ந்த கிராம மக்கள் திடீரென ஆரணி-செய்யாறு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாழைப்பந்தல் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிதக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.