மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

மின் வெட்டு, குடிநீா் பிரச்னையை கண்டித்து தஞ்சாவூா் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே தொடா் மின் வெட்டு, குடிநீா் பிரச்னை காரணமாக வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

News image

~

Updated On :12 ஜூன் 2026, 2:59 am IST

தஞ்சாவூா் அருகே தொடா் மின் வெட்டு மற்றும் குடிநீா் பிரச்னையை கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே ராமாபுரம், வயலூா் உள்ளிட்ட கிராமங்களில் சில நாள்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றுவதற்கான மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடும் நிகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டு உபயோக மின் சாதனங்களும் பழுதாகி வருகின்றன.

இதன் காரணமாக அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் தஞ்சாவூா் - கும்பகோணம் சாலையில் வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த மின் வாரிய அலுவலா்கள், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Story image