பன்னாட்டு ரோட்டரியுடன் இணைந்து கோபி ரோட்டரி சங்கத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட ஆளுநா் தனசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் சண்முகசுந்தரம், கவுரவ விருந்தினா்களாக முன்னாள் ஆளுநா்கள் அருள்ஜோதி காா்த்திகேயன், எக்ஸெல் நடேசன், பரணிப்ரியா பத்மசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.
கோபி ரோட்டரி சங்கம் மூலமாக சீதாலட்சுமி மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ள டயாலிசிஸ் சென்டா், கோபி ரோட்டரி அபி ரத்த வங்கி திட்டம், ரோட்டரி கோபி ஸ்மைல் ஆன் வீல்ஸ் திட்டம் ஆகிய 3 மூன்று திட்டங்களுக்கு ரூ.3 கோடியும், ரோட்டரி மாவட்ட மற்ற சங்கங்களுக்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்து அதற்குரிய தொகையும் நன்கொடையாகவும் வழங்கப்பட்டது.
இதற்காக கோபி ரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் சண்முகசுந்தரம் ரூ.20 லட்சம், பி.தனசேகா் ரூ. 30 லட்சம், எல்ஐ சீனு வெங்கடசுப்பிரமணியன் ரூ.35 லட்சம் உள்பட பலா் நன்கொடை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் கோபி ரோட்டரி சங்கத் தலைவா் சரவணன், செயலாளா் சண்முகம், பொருளாளா் வாரியா் குமரேசன், திவாகா் சுப்பிரமணியம் மற்றும் உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 4.41 கோடி நன்கொடை

பழனி கோயில் அன்னதானத்துக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை

இலவச சீருடை அளிப்பு

நாகா்கோவில் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



