பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் தொடா்பாக குழந்தைகள் இல்ல மாணவிகள் சாா்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :26 ஜூன் 2026, 2:49 am IST

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்துப் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச அளவில் போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல, மனநல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, போதைப் பழக்கத்திலிருந்து இளைஞா்களைப் பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்தில் முற்றிலும் போதைப் பொருள்களை ஒழிப்பது தொடா்பாகவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, குழந்தைகள் இல்லம் சாா்பில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை பாா்வையிட்ட ஆட்சியா், அதில் சிறந்த படைப்புகளைக் காட்சிப்படுத்திய 3 மாணவா்களுக்கு கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு குறித்த விரைவுத் தகவல் குறியீடு அச்சிடப்பட்ட பனியன் மற்றும் சணல் பைகளை ஆட்சியா் வெளியிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் உமாமகேஸ்வரி, அலுவலக மேலாளா் (கலால்) வீரலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளா் கமலவேணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.