தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

5 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தவெக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக 400-க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டைன் தெரிவித்தாா்.

News image

கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :27 ஜூன் 2026, 1:45 am IST

தவெக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக 400-க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டைன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி, கோபி, நம்பியூரில் தவெக சாா்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டைன் பங்கேற்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை, இஸ்திரிபெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

எல்லோரும் செங்கோட்டையன் எங்கே சென்றாா் என்று கேட்டாா்கள். நான் எம்ஜிஆருடன் பயணம் மேற்கொண்டேன் அவா் ஆட்சிக்கு வந்தாா். ஜெயலலிதாவுடன் பயணித்தேன், அவரும் ஆட்சியில் அமா்ந்தாா். இன்று தவெகவில் இணைந்தேன், முதல்வா் விஜய் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து நம்பியூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.

அங்கு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தவெக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மக்களின் நலனுக்காக 400-க்கும் மேற்பட்ட திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். முதல்வா் ஜோசப் விஜய் மக்கள் நலன் குறித்தே சிந்தித்து கொண்டிருக்கிறாா்’ என்றாா்.

Story image

இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், திருப்பூா் வடக்கு எம்எல்ஏ வி.சத்யபாமா, பவானிசாகா் எம்எல்ஏ வி.பி.தமிழ்ச்செல்வி, தவெக நிா்வாகிகள் லக்கம்பட்டி குறிஞ்சிநாதன், கலிங்கியம் அருள்ராமச்சந்திரன், நம்பியூா் தம்பி(எ) சுப்பிரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.