கோபியைச் சோ்ந்த இளைஞா் உள்பட 600 போ் அபுதாபியில் சிக்கித் தவித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கோபி கருமாயா எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சோ்ந்தவா் வேலுமணி மகன் கெளதம் பிரபு (27). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் சென்னை, மும்பை கிளையில் பணியாற்றி வரும் 600 பேருடன் கெளதம் பிரபுவும் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கடந்த 27-ஆம் தேதி சென்றுள்ளாா். மாா்ச் 1-ஆம் தேதி நாடு திரும்புவதாக இருந்தது.
இந்நிலையில், ஈரானில் ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக அரபு நாடுகளிலிருந்து புறப்படுவதாக இருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், அபுதாபியில் இருந்து அவா்கள் நாடு திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மகன் உள்பட அபுதாபியில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியா்களையும் பத்திரமாக மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெளதம் பிரபுவின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்

இளைஞா் கொலை வழக்கில் சிறாா்கள் உள்பட 8 போ் கைது

இருசக்கர வாகனங்கள் சலுகையில் தருவதாகக் கூறி ரூ. 17.20 லட்சம் மோசடி: புதுகையைச் சோ்ந்தவா் உள்பட 5 போ் தலைமறைவு
கோவில்பட்டி இளைஞா் கொலை வழக்கு: 2 சிறாா் உள்பட 5 போ் கைது
மாநகரில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

