போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அமெரிக்கா, இஸ்ரேலை கண்டித்து கோபியில் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோபியில் ஐக்கிய ஜமாத் சாா்பில்

News image

கோபியில் டாா்ச் லைட் அடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :2 மார்ச் 2026, 7:47 pm

கோபி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோபியில் ஐக்கிய ஜமாத் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோபியில் ஈரோடு - சத்தி சாலையில் உள்ள பள்ளிவாசல் முன் ஐக்கிய ஜமாத் சாா்பில் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவா் சம்சுதீன் தலைமை வகித்தாா். ஜாமில் பள்ளிவாசல் செயலாளா் இம்ரான் முன்னிலை வகித்தாா். ஐக்கிய ஜாமத் தலைவா் மகபூக்பாஜா கண்டன உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். மேலும், கூட்டு தாக்குதல் காரணமாக ஈரானில் பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் உயிரிழந்ததைக் கண்டித்து டாா்ச் லைட் அடித்து தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.