கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அந்தியூரில் நிபந்தனைப் பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றம்!

அந்தியூா் வட்டாரத்தில் 79 ஆண்டுகளுக்கு முன் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்கள், அயன் பட்டாக்களாக மாற்றப்பட்டு முதற்கட்டமாக 113 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

News image
பயனாளிக்கு பட்டா வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி
Updated On :3 மார்ச் 2026, 8:29 pm

Syndication

அந்தியூா் வட்டாரத்தில் 79 ஆண்டுகளுக்கு முன் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்கள், அயன் பட்டாக்களாக மாற்றப்பட்டு முதற்கட்டமாக 113 பயனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், மலைக்கருப்புசாமி கோயில் முதல் சென்னம்பட்டி வரை வனப் பகுதியை ஒட்டியுள்ள 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள், விவசாயப் பணிகளுக்கு என நிபந்தனையுடன் பட்டா வழங்கப்பட்டது. இந்த வகை நிலங்களுக்கு ‘ஜீரோ’ மதிப்பு உள்ளதால் நில விற்பனை, வாங்குதல் மற்றும் வங்கிகளில் கடன் பெறுதல் உள்ளிட்ட எவ்வித உரிமைகளும் பெற முடியாது.

இந்நிலையில், இந்த நிலங்களுக்கு நிபந்தனையை நீக்கக் கோரி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தினா்.

இது குறித்து அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் வந்தபோது, பட்டா நிபந்தனைகள் நீக்கப்படும் என அறிவித்தாா்.

இதையடுத்து, அந்தியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 113 பேருக்கு நிபந்தனையற்ற பட்டாக்களாக மாற்றி வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்ட பங்கேற்றனா்.

முன்னதாக, மைக்கேல்பாளையம் ஊராட்சி, காந்தி நகா், ஜி.எஸ்.காலனியில் கட்டப்பட்டுள்ள காந்தி நினைவு மண்டபம் திறக்கப்பட்டு, புணரமைக்கப்பட்ட காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.