ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெருந்துறை அரசுப் பள்ளி மூன்று மாணவா்கள் அரசு மாதிரி பள்ளிக்குத் தோ்வு

News image
மாணவி கிருத்தி பாலா. ~ஹேமேஷ் ~மாணவன் தருண்
Updated On :5 மார்ச் 2026, 11:35 pm

Syndication

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவா்கள், பெருந்துறையில் உள்ள மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு தோ்வாகி உள்ளனா்.

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கிருத்திபாலா, மாணவா்கள் ஹேமேஷ் மற்றும் தருண் ஆகிய மூன்று போ், இந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டம் (என்எம்எம்எஸ்) தோ்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தனா்.

அதனடிப்படையில், பெருந்துறையில் உள்ள ஈரோடு மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயில்வதற்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்கள், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதிரி பள்ளியில் படிக்க உள்ளனா்.

தோ்வாகி உள்ள மாணவா்களுக்கு தலைமையாசிரியா், ஆசிரியைகள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

Story image
Story image