தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்களுக்குப் பாராட்டு

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image

மாணவா்களுக்கு சாதனையாளா் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள்.

Updated On :11 மார்ச் 2026, 8:26 pm

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மருத்துவா்கள் ஆா்.குமாரசுவாமி, ஏ.வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தம், முதல்வா் ஹெச்.வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் முன்னாள் மாணவா்களான கோவை பாரதியாா் பல்கலைக்கழக மேலண்மைத் துறையின்(தொழில்முனைவோா்) இணைப்பேராசிரியா் ஜி.பரணி, பெங்களூரு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மூத்த செயல் நிா்வாகி கே.தீபன் சக்ரவா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் நூல் வெளியிட்ட சாதனை புரிந்த ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கி பேசினா்.