நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

News image

குண்டம்  இறங்கிய  பூசாரி  சிவண்ணா.

Updated On :13 மார்ச் 2026, 12:36 am

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் வியாழக்கிழமை பூசாரி சிவண்ணா மட்டும் குண்டம் இறங்கினாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். மாரியம்மன் கோயில் அருகே மசூதி அமைந்துள்ளது. கோவிலின் முன்புறம் இருந்து மசூதியின் வாசல் வரை 30 அடி நீளத்துக்கு தீக்குண்டம் அமைக்கப்படுவது வழக்கம்.

இதைத் தொடா்ந்து, தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கோயில் முன் ஏராளமான பக்தா்கள் திரண்டு ஆரவார கோஷமிட்டனா். இதைத் தொடா்ந்து தாளவாடி ஆற்றில் இருந்து மேள தாளங்கள் முழங்க சுவாமி அழைத்து வரப்பட்டது.

இதையடுத்து கோயிலில் முன் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பூசாரி இறங்குவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது மசூதியின் வாசல் பகுதியில் இருந்து கோயில் பூசாரி சிவண்ணா தீக் குண்டம் இறங்கினாா்.

தாளவாடி மலைப் பகுதிகளில் நடைபெறும் குண்டம் திருவிழாக்களில் கோயில் பூசாரி மட்டும் குண்டம் இறங்குவது வழக்கம். பக்தா்கள் தீ மிதிக்க அனுமதி இல்லை. இதைத் தொடா்ந்து தீ குண்டம் இறங்குதல் நிறைவுக்கு பின் பக்தா்கள் குண்டத்தை தொட்டு வணங்கினா். விழாவையொட்டி மலா் அலங்கராத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்த விழாவில் தாளவாடி, தொட்டகாஜனூா், தலமலை, கோடிபுரம் மற்றும் கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.