மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

News image

பண்ணாரி  சோதனைச் சாவடி  அருகே சாலையைக் கடந்த சிறுத்தை.

Updated On :14 மார்ச் 2026, 8:07 pm

பண்ணாரி- திம்பம் சாலையில் பதுங்கியபடி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் நடமாடுகின்றன. குறிப்பாக பண்ணாரி மற்றும் திம்பம் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, பண்ணாரி சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் வருவதைக் கண்ட சிறுத்தை பதுங்கியபடி மெதுவாக சாலையைக் கடந்தது. சிறுத்தை சாலையைக் கடந்து செல்வதை கண்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினா். இதையடுத்து, சிறுத்தை வனப் பகுதிக்குள் சென்றபின் புறப்பட்டுச் சென்றனா்.